search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுபான்மை பள்ளிகள்"

    சிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக கடந்த ஆண்டு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. #MinoritySchools #MadrasHighCourt
    சென்னை:

    சிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக, தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், 50 சதவீத சிறுபான்மை மாணவர்களை சேர்க்கும் பள்ளிக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என அந்த அரசாணையில் கூறப்பட்டிருந்தது.



    இந்த அரசாணையை எதிர்த்து 140 கல்வி நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிறுபான்மை பள்ளிகள் நடத்துவதற்காக வழங்கப்பட்ட உரிமையை பறிக்கும் வகையில் இந்த அரசாணை உள்ளது என்றும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், சிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்தது. #MinoritySchools #MadrasHighCourt
    ×